ஆகஸ்ட்-12 ஜூன் 26 அன்று மதேபுரா பணித்தளத்தில் நடைபெற்ற ஒரு
நாள் கன்வென்ஷன் கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டத்தில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன்
மற்றும் சகோதர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் 130 பேர் பங்கு
பெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்றுச் சென்றனர். இப்பணித்தளத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும்
மற்றும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-13 தர்பங்கா
பணித்தளத்தின் தீமோத்தேயு வேதாகம கல்லூரியின் பத்தாவது அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு
நிகழ்ச்சி ஜூன் 28 ஞாயிறு அன்று
நடைபெற்றது. இந்நிலையில், சகோதரர்.ஷாஜன் தேவ செய்தி அளித்து
மாணவர்களை அர்ப்பணித்து அவர்களுக்காக
ஜெபித்தார். பயிற்சியினை நிறைவு செய்த சகோதரர்கள் பணித்தளங்களில் தொடரவிருக்கும்
ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-14 பாரு பணித்தளத்தில் ஜூலை 12 அன்று நடைபெற்ற ஒருநாள் கன்வென்ஷன் கூட்டத்தில் 450 விசுவாசிகள் பங்கேற்றனர்;. சகோதரர் ஷாஜன் மற்றும் சகோதரர் டேனியல் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார்கள். பாரு பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் நற்செய்தி ஊழியங்களுக்காகவும், பணித்தள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-15 பாட்னா ஜெம்ஸ் செயல் மையத்தில், ஜூலை 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற வாலிபர் கூடுகையில், பாஸ்டர். ஜான் ஜெயக்குமார் (நாகர்கோவில்) தேவ செய்தியுடன் வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் அளித்து வாலிபர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தினார். இக்கூடுகையில், 110 வாலிப சகோதர சகோதரிகள் பங்கு பெற்றனர். கடைசி நாளில் ஏறெடுக்கப்பட்ட ஜெப வேளையின்போது, அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும், அநேகர் ஊழியத்திற்கென்றும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். பணித்தள வாலிபர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
ஆகஸ்ட்-16 மிகுவல் பணித்தளத்தில் ஜூலை 18 அன்று நடைபெற்ற ஊழியர் இல்ல அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்; சகோதரர் ஆனந்தன் ஜெபத்துடன் இல்லத்தை அர்ப்பணித்து திறந்துவைத்தார். இப்பணித்தளத்தில் புதிய ஆத்துமாக்களை கர்த்தர் மந்தையில் சேர்க்கவும், பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
.jpg)
.jpg)
















