வடக்கு மண்டலம்
டிசம்பர் 07 பசோபட்டி பணித்தளத்தில் ஒருநாள் பெண்கள் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமுதாயத்திலும் மற்றும் குடும்பத்திலும் கிறிஸ்துவின் அன்பினை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக பெண்கள் செயல்பட நடைமுறை ஆலோசனைகளுடன் தேவசெய்தியையும் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார் சகோதரி சஜிலா நார்டன். இக்கூட்டத்தில் 90 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
டிசம்பர் 08 மாணவர் ஞாயிறை முன்னிட்டு, நவம்பர் 9 அன்று, வடக்கு மண்டலத்தின் அனைத்து பணித்தள ஆலயங்களிலும், ஞாயிறுப் பள்ளி மாணவர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனை தேவ நாமத்தை மகிமைப்படுத்தியதுடன், சபை மக்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் மற்றும் ஞாயிறுப் பள்ளி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
டிசம்பர் 09 தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளை நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 10 மதுபனி பணித்தளத்தில், நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் மற்றும் ராஜ்நகர் பணித்தளத்தில் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில் ஜெம்ஸ்-ன் Advance WET Team ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு, தேவ செய்தியளித்து பங்கேற்றோருக்காக ஜெபித்தனர். இக்கூடுகைகளில், 167 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தள பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் வரும் நாட்களில் கர்த்தர் மாற்றங்களைக் கொண்டுவர ஜெபிப்போம்.
டிசம்பர் 11 பாட்னாவில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் தையற்பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் சகோதரிகளுக்காகவும், பீஹாரில் அமைந்துள்ள புதிய அரசிற்காகவும் மற்றும் பாட்னாவில் நடைபெற்றுவரும் வாலிபர் ஊழியங்கள் மூலமாக அநேக வாலிபர்கள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்படவும் ஜெபிப்போம்.
