July 2025

                                                   வடக்கு மண்டலம்


ஜுலை 12 ஜுன் 20 அன்று சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 130 பேர் பங்கேற்றனர். போதகர் ராஜன் (மதுரை) இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களுக்காக ஜெபித்தார். சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இங்குள்ள குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், சுவிசேஷத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

ஜுலை 13 ராஜ்நகர் பணித்தளத்தில் ஜுன் 21 அன்று ஒருநாள் வாலிபர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஆனந்தன் ஆகியோர் தேவசெய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தனர். 60 வாலிப சகோதர சகோதரிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். பணித்தள வாலிபர்களின் இரட்சிப்பிற்காகவும், வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் பலனைத் தரவும், போதை வஸ்துகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 14 வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களிலும் மற்றும்; அவைகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விடுமுறை வேதாகமக் கல்வி ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியர்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கு கர்த்தர் கொடுத்த திறந்த வாசலுக்காக அவரைத் துதிக்கிறோம். இச்சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும், கல்விக்காகவும் மற்றும் இவர்களது பெற்றோருக்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 15 பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் சுகத்திற்காகவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்கள்.......... தடையின்றி நிறைவேற்றப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 16 கடந்த மாதத்தில் இயேசு கிறிஸ்துவைதங்கள் வாழ்க்கையின்  சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஜெம்ஸ் காப்பகங்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், பணித்தளங்களில் செயல்பட்டுவரும் சீஷத்துவப் பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும்