June 2025

 



☁       மே 1 அன்று தர்பங்கா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஒரு நாள் கூடுகையில், தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள 10 பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் கலந்துகொண்டனர். இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். சுமார் 200-க்கும் அதிகமான விசுவாசிகள் இக்கூடுகையில் பங்குபெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.

பாட்னாவின் பர்ஷா பணித்தளத்தில் மே 11 அன்று நடைபெற்ற தையற் பயிற்சி மையத்தின் (SETUP) 13 வது அணி மாணவர்களுக்கான ஒரு வருட பயிற்சி நிறைவு சான்றளிப்பு நிகழ்ச்சியில், 15 மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. தேவனுக்கே மகிமை! தொடர்ந்து ஜுலை 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் புதிய அணிக்காகவும் மற்றும் அதில் இணையவிருக்கும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மே 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கோஹியா, தர்பங்கா மற்றும் பௌவாரி ஆகிய கிராமங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். இதன் மூலமாக, 235 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் கிருபை செய்தார். விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

கர்த்தருடைய பெரிதான கிருபையினால், மே 8,10,12 ஆகிய மூன்று நாட்கள், வடக்கு மண்டலத்தில் மூன்று திருமணங்களை கிறிஸ்தவ முறைப்படி நடத்திமுடிக்க தேவன் கிருபை செய்தார்.

விசுவாசப்     பிள்ளைகளுக்கு    ..கிறிஸ்தவ முறைப்படி திருமணங்கள் நடத்தப்படவும், சரியான வாழ்க்கைத்  துணை கிடைக்க தேவன் கிருபை செய்யவும் ஜெபிப்போம்.