வடக்கு மண்டலம்
ஆகஸ்ட் 11 குஷ்ருபூர் பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் சகோ. எமர்சன் தேவ செய்தி அளித்து, ஜனங்களுக்காக ஜெபித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார். இந்தக் கூட்டத்தில் 200 விசுவாசிகள் பங்கு பெற்றனர். மகுவல் பணித்தளத்தில் நடைபெற்று வருகிற ஊழியர் இல்லப் பணிகள் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறவும் மற்றும் அதன் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 12 தர்பங்கா பணித்தளத்தில் வேதாகமக் கல்லூரியின் 9 - வது அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று, தேவ செய்தி அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அவ்வாறே, தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்பின் முதலாம் அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியும் தேவ ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், சுவிசேஷப் பணியில் உற்சாகமாக முன்னேறிச் செல்லவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 13 ஜூலை 8 அன்று பர்சா ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், சகோதரி சிஜி ஷாஜன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 300 பெண்கள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் ஊழியங்கள் நல்ல பலன்களை தரவும், பெண்கள் மூலமாகச் சமுதாயத்தில் மாற்றங்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 14 புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், 120 வாலிப சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளை வழங்கி, தேவ செய்தி அளித்து வாலிபர்களை உற்சாகப்-படுத்தினார்கள். பணித்தளங்களில் போதையின் பிடியில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும், மேற்படிப்பிற்காகக் காத்திருக்கும் வாலிபர்களுக்கு ஏற்ற வழி வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 15 பாரூ பணித்தளத்தில் ஜூலை 12 அன்று ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார்கள் இந்தக் கூட்டத்தில் 137 விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகிவரும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 16 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தினங்கள், வடக்கு மண்டலத்தின் மூன்று ஆங்கில வழிப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கூடுகை நடைபெற்றது. னுச. ஜோ பால்சன், சகோ. ஆனந்த குமார் மற்றும் சகோ. சார்லஸ் ஹ_ல்சன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூடுகையில், 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெம்ஸ் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காகவும் ,அவர்கள் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.