மார்ச் 11 : புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 150 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோ. ஜான் ஜெயக்குமார் வாலிபருக்கேற்ற செய்தியை பகிர்ந்துகொண்டு, வாலிபரை ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். இம்முகாமில் கலந்துகொண்ட வாலிபர் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும், தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரதிபலிக்கவும், உடன்வாலிபரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தவும் ஜெபிப்போம்.
மார்ச் 12 : பர்சா மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 180 பெண்கள் பங்குபெற்றனர். சகோதரி சஜிலா நார்டன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் மாற்றங்கள் உருவாகவும் ஜெபிப்போம்.
மார்ச் 13 : பிப்ரவரி 21 அன்று மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 110 வாலிபர்கள் பங்கேற்றனர். சகோ. வென்னிலவன் மற்றும் ஜெம்ஸ் வாலிபர் ஊழியக் குழுவினர், பாடல்கள், குறுநாடகங்கள் மற்றும் தேவசெய்தியின் மூலமாக வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி, ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை உற்சாகப்படுத்தினர்.
மார்ச் 14 : தர்பங்கா ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணிகளுக்காகவும் மற்றும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 15 : பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து சிறுவர் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்படவும், பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் நற்செய்திக்கு செவிகொடுக்கவும், வீட்டு சபைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம்.
