ஏப்ரல் 11 'கஸ்ரைனி பணித்தளத்தில் மார்ச் 11 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்; பணித்தள மக்கள் 80 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர்; சகோ. ஆனந்தன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 12 'ஹாஜ்பூர் பணித்தளத்தில் மார்ச் 20 அன்று ஒருநாள் கன்வென்ஷன் கூடம் நடைபெற்றது; 150 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சாஜன் ஆகியோர் தேவ செய்தியளித்து, ஜனங்களுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், பணித்தள ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 13 'தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையம் மற்றும் கியோட்டி ரன்வே பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் நிறைவேறவும், ஜனங்கள் விரைவில் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், இப்பணித்தளங்களில் ஆத்தும அறுவடை பெருகவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 14 'அட்மல்கோலா பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெறவும்; தேவைகள் சந்திக்கப்படவும், அட்மல்கோலா பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஆத்தும ஆதாயப் பணிகள் மற்றும் நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக ஆத்துமாக்கள் கர்த்தரின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
ஏப்ரல் 15 'கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கல்விப் பணிகள் மூலமாக 86 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர். நிர்மலி பணித்தளத்தின் கஞ்சர் மக்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கவும், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சிறுவர் கல்விப் பணிகளின் மூலமாக 75 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர்; இச்சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், இவர்களது குடும்பத்தினர் இயேசுவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
