பிப்ரவரி 11 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூடுகையில், 750 மாணவர் மற்றும் மாணவியருக்கு கிறிஸ்துவின்
அன்பினை அறிவிக்கவும் மற்றும் தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில்
சுமார் 950 பேருக்கு
நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில்
பயிலும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர்களின்
பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும்
ஜெபிப்போம்.
பிப்ரவரி 12 தர்பங்கா மாவட்டத்தில் முடிடப்பட்டிருந்த சபையினை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்
உதவியுடன் ஜனவரி 15 அன்று மீண்டும்
திறக்கவும், ஆராதனை நடத்தவும்
கர்த்தர் உதவிசெய்தார். இம்மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தளங்களில் ஆராதனை எவ்விதத் தடையின்றி
நடைபெறவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 13 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், ஜனவரி 21 அன்று சியோகர்
பணித்தளத்தில் புதிதாக Children Club தொடங்க கர்த்தர் உதவிசெய்தார்.
இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் சிறுவர்
ஊழியங்களுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணியின்
மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 14 பெனிப்பூர் பணித்தளத்தில் திடீரென வந்த சமூக விரோதிகள், ஜெம்ஸ் ஊழியரை அடித்து, ஆலயத்தின் கதவு மற்றும் முன் வாசலை பூட்டி,
தங்கள் மதத்தின்
கொடியையும் ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து
காணப்பட்டுவரும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து
நிற்கவும் ஜெபிப்போம்.