வடக்கு மண்டலம்
அக்டோபர் : 12 தர்பங்கா, மதுபனி, லதன்யா, நிர்மலி மற்றும் ஜன்ஜார்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை பெங்களுரைச் சேர்ந்த ஆPவுஊ மாணவர்கள் பார்வையிட்டதுடன், கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களுடனும் இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டு தேவனை மகிமைப்படுத்தினர். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள ஜெபிப்போம்.
அக்டோபர் : 13 சீத்தாமடி பணித்தளத்தில், செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 300 பேர் பங்குபெற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் இக்கூடுகையில் தேவசெய்தியளித்து ஜனங்களுக்காக ஜெபித்தார். விசுவாசிகள் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும், பெலவீனமாயிருக்கும் விசுவாசிகளை கர்த்தர் குணமாக்கவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 14 ராம்பூர், புல்வாரி ஷெரீப் மற்றும் பர்சா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகைகளில் 500 வாலிபர்கள் பங்கேற்றனர்; இக்கூடுகையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த சகோ. அவினாஷ், வாலிபர்களுக்கேற்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபர்களின் அனுதின வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தார். ஜெப வேளையின்போது அநேக வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணத்தில் நிலைத்து நிற்கவும், தேவனுக்கு உகந்த சாட்சிகளாக தொடர்ந்து ஜீவிக்கவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 15 வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் வேதாகமக் கல்லூரி, தெபோராள் பயிற்சி மையம், சீஷத்துவப் பயிற்சி மையம் மற்றும் தையற் பயிற்சி மையம் போன்ற பயிற்சி ஊழியங்களுக்காகவும், இங்கு பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் பயிற்சியளிக்கும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 16 ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.