அக்டோபர் 17 மைதிலி-2 கோட்டத்தின் கல்யான்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் வாயிலாக சுமார் 150 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து, பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் வேத வசனங்களுடன் ஜெபத்திலும் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். இச்சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும், கல்வியில் இவர்கள் முன்னேறவும், இவர்களது குடும்பங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 18 மதுபனி பணித்தளத்தில் ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்ற மைதிலி-1 கோட்ட வாலிபருக்கான கூடுகையில் 270-க்கும் மேற்பட்ட வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோ. ஷாஜன் வாலிபரின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளுடன் கூடிய தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். ஜெபவேளையின்போது அநேக வாலிபர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டதுன், தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துக்கென்றும் ஊழியத்திற்கென்றும் அர்ப்பணித்தனர். இக்கூடுகையில் பங்கேற்ற வாலிபர் தொடர்ந்து தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாயிருக்கவும், கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகிற்குத் தங்களை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 19 கடந்த மாதத்தில் பணித்தளங்களில் புதிதாக வீட்டு சபை சபை ஆராதனைகளைத் தொடங்கவும், அதன் மூலமாக உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு கிறிஸ்துவின் அன்பினை எடுத்துச்சொல்லவும் கர்த்தர் உதவிசெய்தார். இத்தகைய வீட்டு சபை ஆராதனையின் எண்ணிக்கைகள் வரும் நாட்களில் பெருகவும், கிராமங்கள் சுவிசேஷமயமாக்கப்படவும், மூட நம்பிக்கைகள் கிராமங்களில் மறையவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 20 பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழவும், குடும்பத்தில் அவர்களுக்கு உண்டாகும் தடைகள் நீங்கவும், ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்கள் வளரவும் ஜெபிப்போம். மேலும், நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் நிறைவடையவும், தேவைகள் சந்திக்கப்படவும், ஜெபிப்போம்.
அக்டோபர் 21 சமஸ்திபூர், சஹர்சா, ரொசரியா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வேதவினாப் போட்டிகளில் அநேக விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விசுவாசிகள் வேத அறிவில் வளரவும், பணித்தள ஆலயங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் வேதபாட வகுப்புகளில் ஆர்வமுடன் பங்கேற்கவும், பணித்தளங்களில் ஆத்தும ஆதாயகர்களாக ஒவ்வொரு விசுவாசியும் மாறவும், விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
.jpg)